Download: Eno eno panithuli
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போது நெஞ்சுக்குள்ளே
போனாய் நீ போனாய் என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக்கொண்டாயே
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்- மாட்டாய் மாட்டாயே...
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீறாதே
மாலைத் தென்றல் பட்டால்கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னை தள்ள நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவைப்போல் நீ இல்லாமல் தேய்ந்தேன்
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி ...
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தை எல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டம் என்பாயா?
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப் போலே தொட்டுத் தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் நீதான் செய்தாய்
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி...
