Monday, September 21, 2009

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி



ஹும்ம்...நீண்ட நாட்களாக தமிழில் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டுமென்று ஆசை. ஆனால் என்ன எழுதுவது? தெரியவில்லை! சொந்தமாக எழுத முடியவில்லை என்றாலும் மனதிற்கு பிடித்த எதையாவது இன்று எழுதிவிட வேண்டுமென்ற முடிவோடு யோசித்த பொழுது, வெளிவர இருக்கும் ஆதவன் படத்திலுள்ள "ஏனோ ஏனோ பனித்துளி" பாடல் நினைவுக்கு வர, அதன் வரிகளையே எழுதி விடலாமென்று தோன்றியது. ஹாரிஸ் ஜெயராஜின் அருமையான கிதார் இசையும், ஷகில், சுதா ரகுநாதன், ஆண்ட்ரியாவின் குரல் இனிமையும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. காரில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக கேட்க வேண்டிய ஒரு பாடல். தாமரையின் வரிகளோ பாடலை முணு முணுக்க வைக்கின்றன. கே எஸ் ரவிக்குமார் நமக்கு ஏமாற்றத்தை தராமல், பாடலை நல்லவிதமாக படமாக்கி இருப்பார்  என்று நினைக்கிறேன். எனக்கு ஒரே ஒரு சிறிய குறை. ஆண்ட்ரியா  "பநிதுலி,  வெலி வாராய்,என்னை தல்ல, என்னி என்னி" என்று
 பாடாமல் நாவை சிறிது திருத்தி பாடி, வரிகளுக்கு மெருகு ஊட்டி இருக்கலாமோ என்று சிறிய எண்ணம்.சரி இதோ அந்த அருமை வரிகளும் இசையும்!

Download: Eno eno panithuli


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போது நெஞ்சுக்குள்ளே
போனாய் நீ போனாய் என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக்கொண்டாயே
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்- மாட்டாய் மாட்டாயே...

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீறாதே
மாலைத் தென்றல் பட்டால்கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னை தள்ள நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவைப்போல் நீ இல்லாமல் தேய்ந்தேன்

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி ...

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தை எல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டம் என்பாயா?
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப் போலே தொட்டுத் தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் நீதான் செய்தாய்         

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி...

No comments:

Post a Comment